/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருமணமான சிறுமி கர்ப்பம் தொழிலாளி மீது 'போக்சோ'
/
திருமணமான சிறுமி கர்ப்பம் தொழிலாளி மீது 'போக்சோ'
ADDED : ஜன 09, 2025 07:50 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு, நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு, பெற்றோர் அழைத்து வந்தனர். பரிசோதனை செய்தபோது, 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. சிறுமி-யிடம் பெற்றோர் விசாரித்தபோது, கெங்கவல்லியை சேர்ந்த, கூலித்தொழிலாளி விக்னேஷ், 29, என்பவரை காதலித்து,
2024 செப்., 16ல், திருமணம் செய்துகொண்டதும் தெரிந்தது. பின் அவ-ரவர் வீட்டில் இருந்ததும், அடிக்கடி தனிமையில் இருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார்படி, குழந்தை திருமணம், 'போக்சோ' உள்பட, 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து, ஆத்துார் மகளிர் போலீசார், விக்னேைஷ தேடுகின்றனர்.