/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆயுள் தண்டனை கைதிக்கு மருத்துவ பரிசோதனை
/
ஆயுள் தண்டனை கைதிக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : அக் 24, 2024 03:23 AM
சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் சிவகுமார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர், சிறைத்துறை டி.ஐ.ஜி., வீட்டு வேலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது அங்கு, 4.25 லட்சம் ரூபாய் திருடியதாக புகார் எழுந்தது. இதனால் சிறை அதிகாரிகள், வார்டன்கள், சிவக்குமாரை தனி அறையில் வைத்து சித்ரவதை செய்ததாக, கைதி சிவக்குமாரின் தாய், சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேலுார் நீதித்துறைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் சேலம் மத்திய சிறைக்கு அவரை மாற்றி, மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி சேலம் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் சிவக்குமாரை, நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். பின் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'போலீசார் தாக்கப்பட்டதாக கூறப்பட்டதால் அதற்கான காயம் உள்ளதா என, சோதனை மேற்கொள்ளப்பட்டது' என்றனர்.