ADDED : ஏப் 20, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சேலம், அஸ்தம்பட்டி ராஜாஜி சாலையில், ஸ்ரீ மெடிக்கல் ஷாப் உள்ளது. அங்கு மருந்து ஆய்வாளர் குழுவினர், அண்மையில் சோதனை செய்தனர்.
அப்போது மருந்தாளுனர் இன்றி செயல்பட்டது, மருந்து சீட்டு பதிவேடு பராமரிப்பின்மை, மருந்து விற்பனைக்கு ரசீது வழங்காமை, மனநோய், துாக்கமின்மை மருந்துகளை, முறைகேடாக விற்றது உள்ளிட்ட முறைகேடுகள் கண்டறியப்பட்டன. அதன் மீது மேல் நடவடிக்கை தொடர, சென்னை மருந்து கட்டுப்பாடு இயக்குனருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதை ஏற்று மெடிக்கல் ஷாப் உரிமத்தை நிரந்தர ரத்து செய்து, இயக்குனர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.