ADDED : அக் 26, 2025 01:18 AM
மேட்டூர், மேட்டூர் நகராட்சி கமிஷனர் வாசுதேவன்(பொ) அறிக்கை:
நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை உத்தரவுப்படி, மேட்டூர் நகராட்சி, ஒவ்வொரு வார்டுகளிலும் தனித்தனியே என, 30 வார்டுகளிலும், அக்., 28ல், அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது.
அதில் மக்கள், வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுது, பூங்கா பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு ஆகியவற்றில் குறைபாடு இருந்தால் தெரிவிக்கலாம். சம்பந்தபட்ட வார்டுகளில் வசிக்கும் மக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இடைப்பாடி நகராட்சி
இடைப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட, 30 வார்டுகளில் சிறப்பு வார்டு சபா கூட்டம், வரும், 28ல் நடக்க உள்ளது என, கமிஷனர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.
நாளை தாரமங்கலம்
தாரமங்கலம் நகராட்சியில் உள்ள, 27 வார்டுகளிலும் நாளை மக்கள் குறை கேட்க சிறப்பு வார்டு கூட்டம் நடக்க உள்ளதாக, அதன் நகராட்சி கமிஷனர் பாலமுருகன்
தெரிவித்துள்ளார்.

