/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
9ல் உறுப்பினர் சேர்க்கை: வணிகர்களுக்கு அழைப்பு
/
9ல் உறுப்பினர் சேர்க்கை: வணிகர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூலை 06, 2025 01:55 AM
சேலம், சேலம் கோட்ட வணிக வரி இணை கமிஷனர் சுதா(மாநில வரி) அறிக்கை:சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் பதிவு பெற்ற, பதிவு பெறாத வணிகர்கள், ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய் வரை வியாபாரம் செய்வோர், வணிகர் நல வாரிய பலன் பெற ஏதுவாக, உறுப்பினர் கட்டண தொகை, 500 ரூபாய் செலுத்துவதில், கடந்த ஜூன், 1 முதல், வரும் நவ., 30 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விண்ணப்ப படிவம் பெறுதல், பதிவு செய்தல் போன்ற விபரங்கள் பெறவும், உறுப்பினர் சேர்க்கை விளக்க கூட்டம், உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம், சேலம் பிட்சார்ட்ஸ் சாலை, வணிக வரி அலுவலகத்தில், வரும், 9 மதியம், 3:30 மணிக்கு நடக்க
உள்ளது.அதில் வணிகர்கள், வாரிய உறுப்பினர் ஆவதற்கான விண்ணப்பத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய ஏதுவாக, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

