/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் சட்டசபை தொகுதி பதற்ற ஓட்டுச்சாவடி - 22
/
மேட்டூர் சட்டசபை தொகுதி பதற்ற ஓட்டுச்சாவடி - 22
ADDED : மார் 21, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர் சட்டசபை தொகுதியில், 316 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
2.70 லட்சம் வாக்காளர் உள்ளனர். லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 63 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக தேர்வு செய்யப்பட்டது. இறுதியாக மேட்டூர் நகராட்சி மாதையன்குட்டை, சேலம் கேம்ப், கொளத்துார் ஒன்றியம் கத்திரிப்பட்டி, கோட்டையூர் உள்பட, 22 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஓட்டுச்சாவடிகளில் அசம்பாவிதத்தை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தி, துப்பாக்கி ஏந்திய, மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என, தேர்தல் பணி அலுவலர்கள் தெரிவித்தனர்.

