/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாலாறு நீர்பரப்பு பகுதி வரை தேங்கியுள்ள மேட்டூர் அணை நீர்
/
பாலாறு நீர்பரப்பு பகுதி வரை தேங்கியுள்ள மேட்டூர் அணை நீர்
பாலாறு நீர்பரப்பு பகுதி வரை தேங்கியுள்ள மேட்டூர் அணை நீர்
பாலாறு நீர்பரப்பு பகுதி வரை தேங்கியுள்ள மேட்டூர் அணை நீர்
ADDED : நவ 04, 2024 04:30 AM
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 107 அடியாக உள்ளதால் தமிழகம் - கர்நாடகா எல்லை வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது.
மேட்டூர் அணை மொத்த கொள்ளளவான, 120 அடியை தொட்டால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி வரை காவிரியாற்றில் தண்ணீர் தேங்கி நிற்கும். நேற்று அணை நீர்மட்டம், 107.32 அடியாக இருந்தது. இதனால் தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள பாலாறு நீர்பரப்பு பகுதி வரை, இருபுறமும் மலைகளுக்கு இடையே தண்ணீர் தேங்கியுள்ளது.
நேற்று முன்தினம், 6,712 கன அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, 9,917 கனஅடியாக நேற்று அதிகரித்தது. பாசனத்துக்கு, 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 107.32 அடியாக இருந்தது.
விவசாயிகள் சோகம்
தமிழக எல்லையில் காவிரியின் ஒரு கரையில் சேலம் மாவட்டம், மறுகரையில் தர்மபுரி மாவட்டம் உள்ளது. அணை நீர்மட்டம் கடந்த மாதம், 13ல், 89.26 அடியாக இருந்து படிப்படியாக சரிந்தது. இதனால் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், ஏமனுார்; சேலம் மாவட்டம் செட்டிப்பட்டி காவிரி கரையோர பகுதிகளில் விவசாயிகள் சோளம், கம்பு, நிலக்கடலை பயிரிட்டனர்.
பின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தீவிரமடைந்த மழையால் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த அக்., 30ல், 108.50 அடியாக உயர்ந்தது. இதனால் காவிரி கரையோரம் சாகுபடி செய்த பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. இரு மாவட்ட விவசாயிகளும் வேதனை அடைந்தனர்.