/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை நீர்மட்டம் 6 மாதத்தில் 30 அடி சரிவு
/
மேட்டூர் அணை நீர்மட்டம் 6 மாதத்தில் 30 அடி சரிவு
ADDED : ஜூன் 19, 2024 06:28 AM
மேட்டூர் : மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த, 6 மாதத்தில், 30 அடி சரிந்துள்ளது.மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி.
நீர் கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கடந்த ஆண்டு ஜூன் 12ல் அணை நீர்மட்டம், 103.35 அடியாக இருந்ததால் தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.அதன் பின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் அணை நீர்வரத்து சரிய துவங்கியது. அதற்கேற்ப டெல்டா பாசன நீரும் நிறுத்தப்பட்ட நிலையில் வறட்சியால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிய துவங்கியது.கடந்த ஜன.15ல், 71.04 அடியாக இருந்த அணை நீர்மட்டம், மார்ச் 17 ல், 61.93 அடியாகவும், மே 8 ல், 51.88 அடியாகவும், நேற்று, 42.15 அடியாகம் சரிந்தது. கடந்த, 6 மாதங்களில் அணை நீர்மட்டம், 30 அடியும், நீர் இருப்பு, 20 டி.எம்.சி.,யும் சரிந்துள்ளது.