/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.42 கோடியில் 21 கட்டடங்கள்; அடிக்கல் நாட்டிய அமைச்சர்
/
ரூ.42 கோடியில் 21 கட்டடங்கள்; அடிக்கல் நாட்டிய அமைச்சர்
ரூ.42 கோடியில் 21 கட்டடங்கள்; அடிக்கல் நாட்டிய அமைச்சர்
ரூ.42 கோடியில் 21 கட்டடங்கள்; அடிக்கல் நாட்டிய அமைச்சர்
ADDED : பிப் 14, 2025 07:25 AM
சேலம்: சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள வணிக வரித்துறை அலுவலக வளாகத்தில், பொதுப்பணித்துறை மூலம் பல்வேறு திட்டப்பணிகளுக்கு புது கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், 42.49 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு கட்டடங்கள் கட்ட அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: மக்கள் பயன்பெறும் நோக்கில், 42.49 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும்படி ஆட்சி நடக்கிறது. மக்கள், முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
வணிக வரித்துறை இணை கமிஷனர் சுதா, சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தியாகராஜன், மேயர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம், மண்டல குழு தலைவி உமாராணி உள்பட பலர் பங்கேற்றனர்.