/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரிகள் நீர்மட்டத்தை கண்காணிக்க அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவு
/
ஏரிகள் நீர்மட்டத்தை கண்காணிக்க அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவு
ஏரிகள் நீர்மட்டத்தை கண்காணிக்க அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவு
ஏரிகள் நீர்மட்டத்தை கண்காணிக்க அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவு
ADDED : அக் 16, 2024 07:01 AM
சேலம்: வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணி குறித்து, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.
அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் நீர்நிலைகள், நீர் வழித்தடங்கள், கால்வாய்கள் ஆக்கிரமிப்பின்றி துார்வாரப்பட்டுள்ளதை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். நீர்நிலைகளின் வரத்து கால்வாய், வெளியேறும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
சேலத்தில் மூக்கனேரி, அல்லிக்குட்டை, போடிநாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி, சேலத்தாம்பட்டி ஏரிகள் நீர்மட்டத்தை தொடர்புடைய அலுவலர்கள் கண்காணிப்பதோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள், நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளையும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ., தாசில்தார் அலுவலகங்களில் வெள்ள கட்டுப்பாடு அறை, 24 மணிநேரமும் செயல்பட வேண்டும். பருவமழை பாதிப்பு குறித்து, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், கலெக்டர் அலுவலக கட்டுப்பாடு அறையை, 0427 - 2452202 என்ற எண்ணில், 24 மணி நேரமும் மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். எந்த பாதிப்பின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக சிவதாபுரம், பச்சப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார். நிவாரண முகாம்களில் அனைத்து அடிப்படை வசதிகள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்த கண்காணிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மாநகரில் கழிவுநீர் கால்வாய்கள் முழுமையாக துார்வாரப்பட்டதையும், பாதாள சாக்கடைகள் மூடப்பட்டிருப்பதையும் அலுவலர்கள் உறுதிப்படுத்த அறிவுறுத்தினார். குறிஞ்சி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் மழைக்கால நோய்களுக்கு சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம், மாவட்டத்தில் நடக்கும் சிறப்பு முகாம்களை பார்வையிட்டார். கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.