/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
200 தொகுதி இலக்கு நிறைவேற பாடுபடுங்கள் தொழில்நுட்ப அணிக்கு அமைச்சர் வேண்டுகோள்
/
200 தொகுதி இலக்கு நிறைவேற பாடுபடுங்கள் தொழில்நுட்ப அணிக்கு அமைச்சர் வேண்டுகோள்
200 தொகுதி இலக்கு நிறைவேற பாடுபடுங்கள் தொழில்நுட்ப அணிக்கு அமைச்சர் வேண்டுகோள்
200 தொகுதி இலக்கு நிறைவேற பாடுபடுங்கள் தொழில்நுட்ப அணிக்கு அமைச்சர் வேண்டுகோள்
ADDED : டிச 24, 2024 07:49 AM
சேலம்: ''முதல்வர் அறிவித்தபடி வரும் தேர்தலில், 200 தொகுதி இலக்கை நிறைவேற்றிட தகவல் தொழில்நுட்ப அணி முக்கிய பங்காற்ற வேண்டும்,'' என, அமைச்சர் வேலு பேசினார்.
சேலத்தில், தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று மண்டல அளவில் நடந்தது. சுற்று-லாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.இதில் அமைச்சர் வேலு பேசியதாவதுதி.மு.க.,வின் கொள்கை, சாதனைகளை எடுத்துரைக்க சமூக வலைதளம் முக்கிய பங்களிப்-பாக உள்ளது. அதனால் அனைவரும் எக்ஸ் தளத்தில் கணக்கை துவக்கி, அரசின் சாதனைகளை பரப்பிட வேண்டும். கட்சியினர் துாங்கும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் அரசின் சாதனை-களை எடுத்துரைப்பதுடன், எதிரணியினருக்கு பதில் அளிப்ப-திலும் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த அணியை அறிவாளி அணி என்றும் கூறலாம். முதல்வர் அறிவித்தபடி வரும் தேர்-தலில், 200 தொகுதி இலக்கை நிறைவேற்றிட தகவல் தொழில்நுட்ப அணி முக்கிய பங்காற்ற வேண்டும். இவ்-வாறு பேசினார். வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில்,''கட்-சியில் மூத்த முன்னோடிகள் அனுபவத்துடன், ஆற்றல் மிக்க இளைஞர் அணி, அறிவுசார் தொழில்நுட்ப அணியும் சேர்ந்து, முதல்வரின் திட்டங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.அமைச்சர் ராஜேந்திரன் பேசுகையில்,''பா.ஜ., - அ.தி.முக., உள்-ளிட்ட கட்சிகளின் பொய்யான தகவல்களை தடுக்கும் பணியில், தகவல் தொழில்நுட்ப அணி ஈடுபட வேண்டும். அதோடு வெளி-நாடுகளும் பின்பற்றக்கூடிய திட்டங்களை, முதல்வர் நிறை-வேற்றி வருவதை, சமூக வலைதளம் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார். அமைச்சர் டி.ஆர்.பி., ராஜா பேசுகையில், ''வரும் மார்ச், 1க்குள் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பயிற்சி பாசறை கூட்டம் நடத்த வேண்டும். பேசி, பேசி வளர்ந்த இயக்கம் தி.மு.க., அதனால், புதிய பேச்சாளர்-களை துணை முதல்வர் உருவாக்கி வருகிறார். அவர் வழியில் தொகுதிக்கு, 10 பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். மூத்த நிர்-வாகிகள் மூலம் வரலாற்றை தெரிந்து கொண்டு, பேச்சாளர்கள் உரையாற்ற வேண்டும்,'' என்றார்.பின், தகவல் தொழில்நுட்ப அணியில் சிறந்து விளங்கிய நிர்வாகி-களுக்கு பரிசு வழங்கப்பட்டன. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட நிர்வா-கிகள் கலந்து கொண்டனர். எம்.பி.,க்கள் செல்வகணபதி, மலையரசன், மணி, மாவட்ட செயலர்கள் சிவலிங்கம், தடங்கம் சுப்ரமணி, பழனியப்பன், மதுரா செந்தில், வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உள்பட பலர் உடனிருந்தனர்.