ADDED : அக் 19, 2026 01:11 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவரது பெற்றோர் நல்லுசாமி, ருக்குமணிக்கு, 90 வயது பூர்த்தியானதால், கனஹாபி ேஷக திருமண விழா, தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று நடந்தது. அதில், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர், மூத்த தம்பதி-யிடம் ஆசீர்வாதம் பெற்றனர். முன்னதாக கோவிலில், அமைச்-சர்கள், 10 நிமிடம் வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, தம்மம்பட்டி வழி செல்லும் சுவேத நதியில், மத்திய அரசு நிதி மூலம், 2006 - 07ல் கட்டப்பட்ட தடுப்பணை, 2009ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்ததால் சீரமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள், அமைச்சர்
களிடம் மனு வழங்கினர்.
