தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/1 மாதத்துக்கு முன் மாயமானவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

1 மாதத்துக்கு முன் மாயமானவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு

1 மாதத்துக்கு முன் மாயமானவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு


ADDED : அக் 17, 2026 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 17, 2026 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி; பெத்தநாயக்கன் பாளையம், ஏத்தாப்பூர் அருகே குண்டுமணியார் கரடில், நேற்று காலை, 9:00 மணிக்கு, ஒரு வாலிபர் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. அதன் அருகே, 'ஸ்பிளண்டர்' பைக் நிறுத்தப்பட்டிருந்தது.

இதை அறிந்து, ஏத்தாப்பூர் போலீசார் அங்கு சென்று விசாரித்ததில், கடந்த செப்., 18ல் மாயமான, ஒட்டப்பட்டி பாக்குத்தொழிலாளி பாண்டியன், 50, என தெரிந்தது. தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'பாண்டியனுக்கும், அவரது மனைவி தேன்மொழிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டு, ஒரு மாதத்துக்குகு முன் பாண்டியன் வீட்டிலிருந்து சென்று, மருந்து குடித்து உயிரிழந்தது தெரியவந்தது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us