/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காணாமல் போன இளம் பெண் திருமணமான நிலையில் மீட்பு
/
காணாமல் போன இளம் பெண் திருமணமான நிலையில் மீட்பு
ADDED : ஜூலை 18, 2025 01:20 AM
ஆத்துார், காணாமல் போன இளம் பெண்ணை, கோவையில் திருமணமான நிலையில் போலீசார் மீட்டனர்.
ஆத்துார் அருகே, நரசிங்கபுரம், வடக்கு தில்லை நகரை சேர்ந்த சின்னபையன் மகள் கண்மணி, 21. இவர் கடந்த, 12ல், வீட்டில் இருந்தபோது காணவில்லை. சின்னபையன் புகாரில், ஆத்துார் டவுன் போலீசார் விசாரணை நடத்தியதில், எலக்ட்ரீஷியனாக உள்ள கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்த, ஹரிகிருஷ்ணன் மகன் மணிகண்டன், 24, என்பவரை கண்மணி காதல் திருமணம் செய்து, கோவையில் தங்கியிருந்தது தெரியவந்தது.
நேற்று முன்தினம் கோவை போலீசார் உதவியுடன், ஆத்துார் டவுன் போலீசார், காணாமல்போன கண்மணி, அவரை திருமணம் செய்த மணிகண்டன் ஆகியோரை மீட்டு, நேற்று ஆத்துார் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.இருவீட்டு பெற்றோரையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், மணிகண்டனுடன், கண்மணியை அனுப்பி வைத்தனர்.