/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
படிவத்தை 'ஸ்கேன்' செய்வதில் தாமதம் நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ., கோரிக்கை

ADDED : நவ 21, 2025 01:55 AM
பனமரத்துப்பட்டி, அமானி கொண்டலாம்பட்டி ஊராட்சியில், 21 ஓட்டுச்சாவடி பகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை, அ.தி.மு.க.,வை சேர்ந்த, வீரபாண்டி தொகுதி, எம்.எல்.ஏ., ராஜமுத்து நேற்று ஆய்வு செய்தார். அதேபோல் நெய்க்காரப்பட்டி ஊராட்சியில், 10 ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டார்.
இதுகுறித்து, எம்.எல்.ஏ., ராஜமுத்து கூறியதாவது: மக்கள், படிவத்தை நிரப்பி ஆசிரியர்களிடம் கொடுக்கின்றனர். அவர்களது மொபைல் போன்களில் சரியாக, 'சிக்னல்' கிடைக்காததால், படிவத்தை ஸ்கேன் செய்ய இயலவில்லை. பதிவேற்றம் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து, ஆர்.டி.ஓ., - தாசில்தாருக்கு, மொபைல் போனில் தகவல் தெரிவித்தேன். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன் உள்ளிட்ட, அ.தி.முக., நிர்வாகிகள் உடனிருந்தனர்.