/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓமலுார் ஏரிகளை நிரப்ப எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
ஓமலுார் ஏரிகளை நிரப்ப எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஆக 14, 2025 02:24 AM
சேலம், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சி யின்போது, 560 கோடி ரூபாய் மதிப்பில், மேட்டூர் அணை உபரி நீரால், ஓமலுார், மேட்டூர், இடைப்பாடி, சங்ககிரி சட்டசபை தொகுதிகளில், 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை, இ.பி.எஸ்., தொடங்கிவைத்தார். அதில், 6 ஏரிகளுக்கு நீர் நிரப்பப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், இப்பணி மெத்தனமாக நடந்தது.
தற்போது ஓமலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வைரனேரி, அரியாம்பட்டி, செலவடை ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் முடிந்துள்ளன. அதனால் மேட்டூர் உபரி நீரை திறந்து வைரனேரியை நிரப்ப மனு அளித்தேன். பணி மெத்தனமாக நடப்பதால், தற்போது, 30 ஏரிகளுக்கு மட்டும் தண்ணீர் வழங்கப்படுகிறது. ஓமலுார் தொகுதியில் உள்ள ஏரிகளை நிரப்பினால், 2,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அதனால் தாமதமின்றி உபரிநீரை திறந்துவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.