ADDED : ஜன 08, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் ராஜூ, 40. இவர், 2 கொலை, வழிப்பறி வழக்குகளில் சிக்கி, ஆயுள் தண்டனை பெற்று, 2019 முதல், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு நேற்று நடந்த சோதனையின்போது, ராஜூ அறையில் மொபைல் போன் இருந்தது. இதனால் ராஜூ, அவரது உறவினர்களை சந்திக்க, 3 மாதங்கள் தடை விதித்து, சிறை எஸ்.பி., வினோத் உத்தரவிட்டார். மேலும் அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.