/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மத்திய சிறையில் மொபைல்போன் மீட்பு
/
சேலம் மத்திய சிறையில் மொபைல்போன் மீட்பு
ADDED : டிச 02, 2025 02:22 AM
சேலம், சேலம் மத்திய சிறையில், 1,200க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர். சமீபமாக மத்திய சிறையில் மொபைல் பயன்பாடு கைதிகளிடம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 10க்கும் மேற்பட்ட மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த, 28ல் கைதிக்கு வழங்குவதற்காக கொண்டு சென்ற, மூன்று மொபைல்போன், 80 கிராம் கஞ்சா, சிம்கார்டு ஆகியவை, சிறை வார்டன் செல்வராசுவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு, அவரை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சிறை சோதனை குழுவினர் நேற்று, 8ம் தொகுதியில் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த மரப்பொந்தில் பதுக்கி வைக்கப்பட்ட, ஒரு மொபைல் போன் கண்டுபிடிக்கப்பட்டது. அதை சிறை கண்காணிப்பாளர் வினோத்திடம், சோதனை குழுவினர் ஒப்படைத்தனர்.
மரப்பொந்தில் மொபைல்போனை வைத்தது யார் என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது.

