/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபைல், சிம் கார்டு பறிமுதல்; 3 கைதிகளுக்கு சலுகை ரத்து
/
மொபைல், சிம் கார்டு பறிமுதல்; 3 கைதிகளுக்கு சலுகை ரத்து
மொபைல், சிம் கார்டு பறிமுதல்; 3 கைதிகளுக்கு சலுகை ரத்து
மொபைல், சிம் கார்டு பறிமுதல்; 3 கைதிகளுக்கு சலுகை ரத்து
ADDED : நவ 20, 2024 07:36 AM
சேலம்: சென்னை, வடபழனியை சேர்ந்தவர் விஸ்வநாதன், 26. அரும்பாக்கத்தை சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு, 39, ஜெபஸ்டீன், 27. இவர்கள், 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகளால், 6 மாதங்களுக்கு முன் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று காலை, 8:30 மணிக்கு கைதிகளுக்கு குறைதீர் முகாம் நடந்தது. அப்போது தொகுதி வாரியாக அறைக்குள் அடைக்கப்பட்ட கைதிகளிடம் தனித்தனியே குறைகள் கேட்டறியப்பட்டன. அதில், 17வது தொகுப்பில் அடைக்கப்பட்டிருந்த ஜெபஸ்டீன் உள்ளிட்ட கூட்டாளிகள், 3 பேரின் நடவடிக்கையில் சிறை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து சோதனை செய்த போலீசார், அறை எதிரே உள்ள அரச மரத்தையும் சோதனையிட்டதில் பாலிதீன் கவரில் ஒரு மொபைல் போன், சிம் கார்டு, பேட்டரி கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதுபற்றி அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்து, 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் மூவருக்கும், சிறை சலுகைகளை, 3 மாதங்களுக்கு ரத்து செய்து, அதன், எஸ்.பி., வினோத் உத்தரவிட்டார்.