ADDED : செப் 26, 2026 05:41 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்; ஓமலுார் வட்டாரம் மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி நடந்து வருகிறது. குறிப்பாக ஊராட்சி பகுதிகளில், 40 பேர், ஓமலுார், கருப்பூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் தலா, 10 பேர் என, 60 கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடுகள் தோறும் சென்று ஆய்வு செய்து,
டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, காமலாபுரம், கோட்டை மாரியம்மன் கோவில், ஆர்.ஆர்.நகர் பகுதிகளில், கொசு மருந்து புகை அடித்தல், துாய்மை பணி மேற்கொண்டனர். தினமும், 15 கிரமாங்களிலும், நகர் பகுதியில் தொடர்ந்து சுழற்சி முறையிலும், இப்பணி நடக்கிறது.
