ADDED : அக் 11, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, இடைப்பாடி, நெடுங்குளம் காட்டூரை சேர்ந்த விவசாயி குணசேகரன், 38. இவரது மகள் பிரகதீஸ்வரி, 21. இவருக்கும் ராசிபுரத்தை சேர்ந்த ராஜராஜனுக்கும், 3 ஆண்டுக்கு முன் திருமணமானது.
இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. தம்பதி இடையே தகராறால், ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். பிரகதீஸ்வரி, குழந்தையுடன், அவரது பெற்றோர் வீடான நெடுங்குளத்தில் வசிக்கிறார்.
இந்நிலையில் பிரகதீஸ்வரி, அவரது குழந்தையுடன், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வீட்டை விட்டு சென்றார். பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் நேற்று குணசேகரன் புகார்படி, பூலாம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.