/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெண்ணிடம் நகை திருடிய ஊத்துக்குளி வாலிபர் கைது
/
பெண்ணிடம் நகை திருடிய ஊத்துக்குளி வாலிபர் கைது
ADDED : அக் 11, 2025 01:02 AM
இடைப்பாடி, கொங்கணாபுரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி, 62. கொங்கணாபுரம் ரவுண்டானாவில், பூஜை பொருட்கள் கடை வைத்துள்ளார். கடந்த, 3 மாலை, 5:00 மணிக்கு, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வந்த ஒருவர், பூஜை பொருட்கள் வாங்கிக்கொண்டு, 1,000 ரூபாய்க்கு சில்லரை கேட்டுள்ளார்.
பாப்பாத்தி, சில்லரை எடுக்க திரும்பியபோது, அங்கிருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு, அந்த நபர் தப்பினார். பாப்பாத்தி, அவரது பையில், 53,700 ரூபாய், 8 கிராம் தங்க காசு இருந்ததாக கொடுத்த புகார்படி, கொங்கணாபுரம் போலீசார் விசாரித்தனர்.
தொடர்ந்து, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்த குமரேசன், 49, என தெரிந்தது. அவரை நேற்று, போலீசார் கைது செய்து, 53,700 ரூபாய், தங்க காசுகளை மீட்டனர். மேலும் திருட பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.