/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்
/
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்
ADDED : அக் 11, 2025 01:04 AM
சேலம் தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி போத்தனுார் - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 19 இரவு, 11:20 மணிக்கு, போத்தனுாரில் புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே மறுநாள் காலை, 8:45க்கு சென்னையை அடையும். மறுமார்க்க ரயில், சென்னை சென்ட்ரலில், வரும் 22 மதியம், 12:15க்கு புறப்பட்டு, இரவு, 10:00 மணிக்கு போத்தனுாரை அடைகிறது.
அதேபோல் சென்னை சென்ட்ரல் - மங்களூரு சிறப்பு ரயில், வரும், 20 மதியம், 12:15க்கு சென்னையில் புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார் வழியே மறுநாள் காலை, 8:00 மணிக்கு மங்களூருவை அடையும். மறுமார்க்க ரயில், 21 மாலை, 4:35க்கு மங்களூருவில் புறப்பட்டு, மறுநாள் காலை, 10:15க்கு
சென்னையை அடையும்.
திருவனந்தபுரம் வடக்கு - சென்னை எழும்பூர் ரயில், வரும், 21 மாலை, 5:10க்கு புறப்பட்டு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியே காலை, 11:00 மணிக்கு, சென்னை எழும்பூரை அடையும். மறுமார்க்க ரயில், 22 மதியம், 1:25க்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை, 8:00 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும். முன்பதிவு, நாளை காலை, 8:00 மணிக்கு தொடங்கும்.