ADDED : அக் 11, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம் புரட்டாசி கிருத்திகையை ஒட்டி, தாரமங்கலம் சுப்ரமணியர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. அதில் சுவாமிக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து, சந்தனகாப்பு, பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.
இரவு, 7:00 மணிக்கு மேல், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர், பூக்கள் அங்காரத்தில், திருவீதி உலா தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியே, 'அரோகரா' கோஷம் முழங்க சென்ற பக்தர்கள், கோவிலில் நிறைவு செய்தனர்.