/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாதி சாலையை காணவில்லை வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
/
பாதி சாலையை காணவில்லை வாகன ஓட்டிகள் திண்டாட்டம்
ADDED : டிச 10, 2025 11:08 AM
பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை அருகே நில-வாரப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. நெடுஞ்சா-லையில் இருந்து அரசு உயர் நிலைப்பள்ளி வழியே ஜருகுமலை அடிவாரம் வரை தார்ச்-சாலை செல்கிறது. இது, ஏலக்கரடு, நிலவாரப்-பட்டி, கவுண்டன்குட்டை, மூலக்காடு, காட்டுவ-ளவு உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் சாலை-யாக உள்ளது. 7 ஆண்டுக்கு முன், 'நபார்டு' திட்டத்தில் புதுப்பிக்-கப்பட்ட இச்சாலை, பல்வேறு இடங்களில் தார் கலவை பெயர்ந்து, ஜல்லிகள் சிதறி கிடக்கின்-றன.
குறிப்பாக நிலவாரப்பட்டி பிரிவு, மாணவியர் உறைவிடப்பள்ளி அருகே சாலை சீரழிந்து காணப்படுகிறது. அய்யனாரப்பன் கோவில், காட்டு வளவு பிரிவு ஆகிய இடங்களில்
பாதி சாலையை காணவில்லை. அங்கு ஜல்லிகள் பெயர்ந்து மண் சாலையாகவே மாறிவிட்டது.இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'சாலை சேதம் அடைந்துள்ளதால், இரு சக்கர வாகனங்களை ஓட்டிச்செல்லவே மிகவும் சிரமப்படுகிறோம். இரவில் விளக்கு வெளிச்சமும்
இல்லாததால், சாலையில் செல்லவே முடியவில்லை. 36 அடி அகல சாலையை இருபுறமும் ஆக்கிரமித்துக்-கொண்டனர். அதனால், 15 அடி சாலையாக குறு-கிவிட்டது. சாலை
நிலத்தை அளந்து எல்லை கல் நட்டு ஆக்கிரமிப்பை அகற்றிய பின், தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்-றனர்.

