sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முட்டல், பூமரத்துப்பட்டி சாலை படுமோசம் விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்

/

முட்டல், பூமரத்துப்பட்டி சாலை படுமோசம் விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்

முட்டல், பூமரத்துப்பட்டி சாலை படுமோசம் விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்

முட்டல், பூமரத்துப்பட்டி சாலை படுமோசம் விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்


ADDED : ஏப் 27, 2025 05:01 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: முட்டல், பூமரத்துப்பட்டி மலைக்கிராம சாலையை, 15 ஆண்-டாக வனத்துறையினர் புதுப்பிக்காததால், படுமோசமாக மாறி வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயம் அடைவது தொடர்கி-றது.

சேலம் மாவட்டம் தலைவாசல், மணிவிழுந்தான் ஊராட்சி முட்டல், பூமரத்துப்பட்டி கிராமம், கல்வராயன்மலை காப்புக்காடு பகுதியில் உள்ளது. அங்கு, 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஜடையகவுண்டன் காப்புக்காடு முதல் முட்டல் வரை, 4 கி.மீ., மற்றும் அதே காப்புக்காட்டில் இருந்து பூமரத்துப்பட்டிக்கு, 2 கி.மீ., சாலை, 15 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டது.

சாலை குறுக்கே, பல இடங்களில் நீரோடைகள் செல்வதால் கான்கிரீட் தரைப்பாலம், சாலை சேதமடைந்து சீரழிந்துள்ளது. இதனால் சைக்கிள், மொபட், பைக்குகளில் செல்லும்போது, அடிக்கடி தடுமாறி விழுந்து மக்கள் காயம் அடைவது தொடர்கி-றது. தவிர காலை, மாலையில் காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் சாலை வழியே செல்வதாலும், மின்விளக்கு வசதி இல்லாததாலும், மலைக்கிராம மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளா-கியுள்ளனர்.

இதுகுறித்து, முட்டல்,

பூமரத்துப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி வசந்தி,

கண்ணையன் கூறியதாவது:

கடந்த, 2022ல், மணி

விழுந்தானில் நடந்த சிறப்பு மனு நீதி முகாமில், அப்போதைய கலெக்டரிடம், சாலை, பஸ் வசதி கேட்டு மனு அளித்தும் நடவ-டிக்கை இல்லை. 2024 லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக, பேனர் வைத்தோம். இதுகுறித்து, 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியான பின்,

ஆர்.டி.ஓ., - தாசில்தார் ஆய்வு செய்தனர். தொடர்ந்து மார்ச், 11 முதல், அரசு டவுன் பஸ்

இயக்கப்படுகிறது. சாலையை சீரமைப்பதாக, பஸ்சை தொடங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்தார். இதுவரை நடவ-டிக்கை இல்லை. கடந்த மார்ச், 15ல், தமிழக முதல்வர், சேலம் கலெக்டர், வனத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம், ரேஷன், வாக்காளர், ஆதார் கார்டுகளை, அரசிடம் ஒப்படைப்ப-தாக மனுக்கள் அனுப்பினோம். ஆனால் மனு குறித்து, எந்த அதி-காரிகளுமே கண்டுகொள்ளவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி கூறுகையில், ''சாலை அமைப்பது குறித்து வனத்

துறையிடம் அறிவுறுத்தப்

பட்டுள்ளது,'' என்றார்.

ஆத்துார் வனச்சரகர் ரவிபெருமாள் கூறுகையில், ''ஒரு மாதத்-துக்கு முன், 4 கி.மீ., சாலையை புதுப்பிப்பது தொடர்பாக, அர-சுக்கு கோப்புகள் அனுப்பினோம். காப்புக்காடு என்பதால் பாது-காப்பான முறையில், மழைநீர் வடிகால் வசதியுடன் சாலை அமைக்க, உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us