/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பராமரிப்பு பணியால் இரு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
/
பராமரிப்பு பணியால் இரு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணியால் இரு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
பராமரிப்பு பணியால் இரு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்
ADDED : ஜூலை 15, 2024 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக, இரண்டு சேலம் வழி ரயில்கள், மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பரா-மரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஜூலை 16, 18, 20, 23, 25, 27, 30 தேதிகளில், ஆலப்புழா - தன்பாத் ரயில், எர்ணாகுளம்--பெங்களூரு இன்டர்சிட்டி ரயில் ஆகியவை போத்தனுார், இருகூர் வழியே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். கோவை ஜங்சனுக்கு செல்லாது. மாறாக போத்தனுாரில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.