/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்சில் எம்.பி., ஆய்வு டிரைவருக்கு அறிவுரை
/
பஸ்சில் எம்.பி., ஆய்வு டிரைவருக்கு அறிவுரை
ADDED : மே 10, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, சங்ககிரி புது பஸ் ஸ்டாண்டுக்குள், டவுன் பஸ்கள் செல்வதில்லை என, நேற்று சங்ககிரி வந்த, நாமக்கல் தொகுதி எம்.பி., மாதேஸ்வரனிடம் மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்ற, எஸ்2 டவுன் பஸ்சில் ஏறிய எம்.பி., பணியில் இருந்த டிரைவர், கண்டக்டர்களிடம், 'பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் இருக்கக்கூடாது. இனி இதுபோன்ற தவறு கூடாது' என, அறிவுரை வழங்கினார்.