ADDED : மே 02, 2025 02:39 AM
நாமக்கல்:நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டில், எம்.பி.,மாதேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டு, சுகாதார வசதிகளை மேம்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நாமக்கல் புது பஸ் ஸ்டாண்ட், சேலம் சாலை, முதலைப்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.
பழைய பஸ் ஸ்டாண்ட் தற்போது டவுன் பஸ் ஸ்டாண்டாக செயல்பட்டு வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் வெளியூர் பஸ்கள், பஸ் ஸ்டாண்டிற்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கிச்செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், பழைய பஸ் ஸ்டாண்ட் கடை உரிமையாளர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இந்த கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், நாமக்கல் கொ.ம.தே.க., எம்.பி., மாதேஸ்வரன் நேற்று திடீரென, பழைய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தார்.
அவர் அங்குள்ள பொது கழிப்பறைகளை பார்வையிட்டார். அப்போது, சில கழிவறைகள் கதவுகள் இல்லாமல் இருந்ததையும் மேலும், சுகாதாரமற்ற நிலையில் இருந்ததை சுட்டிக்காட்டி, அதை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.