/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேறு, சகதியான சந்தை மாடுகள் வரத்து சரிவு
/
சேறு, சகதியான சந்தை மாடுகள் வரத்து சரிவு
ADDED : டிச 14, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், டிச. 14--
ஓமலுார், முத்துநாயக்கன்பட்டி அருகே பெருமாள் கோவில்மேட்டில் நேற்று மாட்டுச்சந்தை கூடியது. தொடர் மழையால் சந்தைக்கு, 600 மாடுகள் மட்டுமே கொண்டு வந்தனர். பால் மாடு, 20,000 முதல், 30,000 ரூபாய், கன்றுக்குட்டி, 10,000 முதல், 15,000 ரூபாய் வரை விலைபோனது.
மேலும் மழையால் சந்தை வளாகம் சேறு, சகதியாக மாறி இருந்ததால், மக்கள், வியாபாரிகள் அவதிப்பட்டனர். விற்பனையும், அதற்கேற்ப மந்தமாகவே இருந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

