ADDED : நவ 14, 2026 04:18 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி செல்லதுரை, 2020ல் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி ஜான் உள்பட, 32 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் தீண்டாமை வன்கொடுமை நீதிமன்றத்தில் நடந்தது. சாட்சி விசாரணை தொடக்கத்தில் செல்லதுரையின் மனைவி ஜான்சிராணி மாற்றி சாட்சியம் அளித்தார். இது, போலீசாருக்கு பின்னடைவாக அமைந்தது.
சில நாட்களில் அவர், 'என்னை பலர் மிரட்டியதால் பிறழ் சாட்சி அளித்தேன். அதனால் மீண்டும் சாட்சி அளிக்க அனுமதிக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இம்மனு மீது விசாரணை நடந்தது. ஆனால் நேற்று, அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
