/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'நாம்' மருத்துவமனை: அமைச்சர் திறப்பு
/
'நாம்' மருத்துவமனை: அமைச்சர் திறப்பு
ADDED : ஆக 28, 2025 01:47 AM
சேலம், சேலம், நெத்திமேடு அருகே, 'நாம்' மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர், மருத்துவமனை நிறுவனர், தலைவர் ரமேஷ் முருகேசன், இயக்குனர்கள் பிரபு செங்குட்டுவேல், நடராஜன் சுப்பிரமணியம், முத்துராஜன் பரமசிவம், கார்த்திகேயன் செங்கோட்டையன் மற்றும் ஸ்ரீதேவி செந்தில்ராஜா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
இதில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் செங்குட்டுவன், முன்னாள் தலைவர் பிரகாசம், திரைப்பட நடிகர் அஜய் ரத்தினம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
மருத்துவமனை சிறப்பம்சங்கள் குறித்து, தலைவர் ரமேஷ் முருகேசன் கூறியதாவது: அனுபவமிக்க மருத்துவர்கள், ஆய்வு கூடம், மருந்தகம் உள்ளிட்ட அனைத்து நவீன வசதிகளுடன், 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக அமைந்துள்ளது. பொது மருத்துவம், விபத்து, அவசர சிகிச்சை பிரிவு; தீவிர சுவாச சிகிச்சை; குழந்தைகள் சிகிச்சை; மேம்பட்ட எலும்பு, விபத்து முதுகெலும்பு அறுவை சிகிச்சை; நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுகள்; உள்ளிட்ட எண்ணற்ற சேவைகள் விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.