/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸின் கதிரியக்கவியல் துறை சார்பில் தேசிய கருத்தரங்கு

ADDED : டிச 09, 2024 07:22 AM
சேலம்: விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட, அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் கதிரியக்கவியல் துறை மூலம், தேசிய கருத்தரங்கு, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி, 'வருங்கால கதிரியக்கவியல் தொழில்நுட்பம்' சார்ந்த தலைப்பில், இந்திய கதிரியக்கவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்துடன், இணைந்து நடத்தப்பட்டது. துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பதிவாளர் நாகப்பன் தலைமை வகித்தார்.
கல்வியல் இயக்குனர் ராஜன் சாமுவேல்; அங்கீகாரம், தரவரிசை இயக்குனர் ஸ்ரீதர் ரெட்டி; சங்க செயலர் கமாண்டர் டேனியல்; சென்னை ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் பன்னீர்செல்வம்; மங்களூரு நிட் பல்கலையின், கே.எஸ் ஹெட்ஜ் கல்லுாரி, கதிரியக்கவியல் துறை உதவி பேராசிரியர் சசிகுமார் ஷெட்டி; திருவனந்தபுரம் புற்றுநோய் மருத்துவமனை மூத்த தொழில்நுட்பவியலாளர் பிரசாத்; சென்னை சிம்ஸ் மருத்துவமனை கதிரியக்கவியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் அகிலா; சென்னை பிலிப்ஸ் நிறுவன பயன்பாட்டு நிபுணர் மோனிகா, விம்ஸ் மருத்துவமனை கதிரியக்கவியல் பிரிவு ஆலோசகர் முரளி கணேஷ் ஆகியோர், பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
ஏற்பாட்டை, துறையின் கதிரியக்கவியல் துறை பொறுப்பாளர் கலைவாணி, உதவி பேராசிரியர்கள் ஆண்டனி ரூபன் அல்போன்ஸ், ஆண்டனி காட்சன் நிஷா மற்றும் தங்க குமரன் செய்திருந்தனர்.