/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை
/
புதுப்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : ஜூன் 01, 2025 01:49 AM
காரிப்பட்டி, அயோத்தியாப்பட்டணம், 6வது மைல், சிந்தாமணி நகரை சேர்ந்த ரத்தினகுமார் மகள் மீனா, 24. பி.இ., பட்டதாரியான இவருக்கு, 5 மாதங்களுக்கு முன், காரிப்பட்டி அடுத்த பூசாரிப்பட்டியை சேர்ந்த மணிமாறன், 27, என்பருடன் திருமணமானது. சமீபத்தில் மீனா, அவரது தாய் வீட்டுக்கு சென்றார். நேற்று காலை, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், மீனா துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பத்தினர் தகவல்படி, காரிப்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'அரசு வேலைக்கு மீனா முயற்சி செய்து வந்தார். வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. இருப்பினும் திருமணமாகி, 5 மாதங்களே ஆவதால், சேலம் ஆர்.டி.ஓ., விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி ஆர்.டி.ஓ., அபிநயா விசாரிக்கிறார்' என்றார்.