/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துார் - மங்களபுரத்துக்கு புதிதாக டவுன் பஸ் இயக்கம்
/
ஆத்துார் - மங்களபுரத்துக்கு புதிதாக டவுன் பஸ் இயக்கம்
ஆத்துார் - மங்களபுரத்துக்கு புதிதாக டவுன் பஸ் இயக்கம்
ஆத்துார் - மங்களபுரத்துக்கு புதிதாக டவுன் பஸ் இயக்கம்
ADDED : ஜூலை 20, 2025 05:47 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துாரில் இருந்து நாமக்கல் மாவட்டம் மங்கள
புரத்துக்கு அரசு டவுன் பஸ் இயக்க, மக்கள் கோரிக்கை விடுத்-தனர். அதனால், ஆத்துார் - மங்களபுரம் எனும் புது வழித்தடம் அறிவித்து, புதிதாக அரசு டவுன் பஸ், தடம் எண்: 5 வழங்கப்பட்-டது. தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், நேற்று, அந்த பஸ் இயக்கத்தை, ஆத்துாரில் தொடங்கிவைத்தார்.
இந்த பஸ், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, காலை, 6:15க்கு புறப்பட்டு, மல்லியக்கரை வழியே மங்களபுரத்துக்கு காலை, 7:10க்கு சென்றடைந்தது. தினமும், 7 முறை, இந்த பஸ் இயக்கப்படும் என, போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும் புது தடத்தில் இயக்கப்பட்ட பஸ்சை மக்கள் வரவேற்று பயணியருக்கு இனிப்பு வழங்கினர்.