sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

/

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்


ADDED : ஜன 18, 2024 10:13 AM

Google News

ADDED : ஜன 18, 2024 10:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விலங்குக்கு கொடுமை

யு - டியூபர் மீது வழக்கு

சென்னை, தி.நகரை சேர்ந்தவர் அருண் பிரசன்னா. விலங்குகள் நல உரிமைகளின் நிறுவனரான இவர், தாரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், 'சின்னப்பம்பட்டியை சேர்ந்த, யு - டியூபர் ரகு உள்பட, 3 பேர், கடந்த டிச., 22ல் உயிருடன் கோழியை, காளை மாட்டின் வாயில் திணித்து அதை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை, ரகு, யு - டியூப்பில் பதிவிட்டுள்ளார். அவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார். இதனால் போலீசார், ரகு உள்பட, 3 பேர் மீது நேற்று வழக்குப்பதிந்தனர்.

மருத்துவமனையில்

கைதி அனுமதி

கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசராபட்டை சேர்ந்தவர் ராமு, 51. கொலை மிரட்டல் வழக்கில், சங்கராபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்தார். சிறை மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஸ்குவாஷ் போட்டியில்அரசு பள்ளி அசத்தல்

மகாராஷ்டிராவில், 67வது அகில இந்திய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த,

9 முதல், 14 வரை நடந்தது. இதில், சேலம்,

கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியர், தமிழக அணி சார்பில் பங்கேற்றனர். 9ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி, பிளஸ் 2 மாணவர் லோகேஷ் ஆகியோர் தங்கம், 8ம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ, குழு போட்டியில் வெள்ளி, தனி நபர் போட்டியில் வெண்கலம் வென்றனர். அவர்களை

ஆசிரியர்கள் பாராட்டினர்.

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்வாழப்பாடி கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், சிங்கிபுரம் துணை மின்நிலைய வளாகத்தில் நாளை காலை, 11:00 மணிக்கு நடக்க உள்ளது. வட்ட மேற்பார்வை பொறியாளர் தெண்டபாணி தலைமை வகிப்பார். இதில் கோட்ட நுகர்வோர், மின்சாரம் தொடர்பான குறை, புகார்களை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை கோட்ட செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

முட்புதரில் வீசிய சிசு

உயிருடன் மீட்பு

ராமநாயக்கன்பாளையத்தில் உள்ள முட்புதரில் குழந்தை இருப்பதாக, ஆத்துார் ஆர்.டி.ஓ., ரமேஷூக்கு, மக்கள் தகவல் அளித்தனர். அங்கு சென்ற ஆர்.டி.ஓ., தாசில்தார் வெங்கடேசன், மருத்துவ குழுவினர், முட்புதரில் இருந்த ஆண் சிசுவை மீட்டனர். அந்த குழந்தை, பிறந்து சில மணி நேரமே ஆனதும் உயிருடன் இருப்பதும் தெரிந்தது. சிசுவை, ஆம்புலன்ஸ் மூலம் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆத்துார் ஊரக போலீசார், சிசுவை முட்புதரில் வீசியவர் யார் என விசாரிக்கின்றனர்.

நாய்கள் கடித்துபுள்ளிமான் பலி

கொளத்துார், பாலமலை அடிவாரம், தட்டான்காட்டுக்கு நேற்று அதிகாலை, 3 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் குடிநீர் தேடி வந்துள்ளது. அப்போது அங்குள்ள நாய்கள், மானை துரத்தி கடித்தன. இதில் கால், கொம்பு உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டு மான் உயிரிழந்தது. மேட்டூர் வனத்துறையினர் அருகே உள்ள

வனப்பகுதியில் புதைத்தனர்.

வங்கி கணக்கு விபரம்

பதிய அவகாசம் நீட்டிப்பு

தமிழக பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு தேசிய திறன், படிப்புதவி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு, 12,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில் நடந்த தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியரின் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை, உதவித்தொகை இணையதளத்தில் ஜன., 15க்குள் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அனைத்து மாணவர்களின் விபரங்களும் பதிவேற்றப்படாததால், ஜன., 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தைப்பூச தேர் திருவிழா

கொடியேற்றம்

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதையொட்டி நந்தி மண்டபம் முன், தேரில் எழுந்தருள உள்ள சோமாஸ் கந்தர், உமாமகேஸ்வரி சுவாமிகளுக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து நந்தி உருவம் வரைந்த கொடி சேலைக்கு, யாக வேள்வி, பூஜை செய்து கொடியேற்றினர். வரும், 24 வரை, சேஷ, புலி, பூத உள்பட, 7 வாகனங்களில் சுவாமி திருவீதி உலா தினமும் இரவு, 7:00 மணிக்கு நடக்கிறது. 25 மதியம், 3:00 மணிக்கு, தேர் திருவிழா தொடங்கும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காளியம்மன் கோவிலில்

24ல் கும்பாபிஷேகம்

சேலம், செவ்வாய்ப்பேட்டையில் உள்ள சித்திர காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 24ல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, 22 காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம், தீர்த்தக்குட ஊர்வலம், மாலை, 6:00 மணிக்கு யாகசாலை பூஜை, மகா தீபாராதனை நடக்க உள்ளது. 23 காலை, 9:00 மணிக்கு யாகசாலை பூஜை, விமான கலசம் வைத்தல், மதியம், 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, இரவு, 9:00 மணிக்கு தீபாராதனை நடக்க உள்ளது. 24 காலை, 9:15 மணிக்கு கடம் புறப்பாடு, 9:45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

பயன்படாத 'இ - டாய்லெட்'

விமான நிலைய பயணியர் அவதி

ஓமலுார் உள்ள, சேலம் விமான நிலையத்துக்கு தினமும், 300க்கு மேற்பட்ட பயணியர், அவர்களை வழியனுப்ப, 200க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். பயணியர், அங்கு வரும் மக்கள் பயன்படுத்த, 'இ - டாய்லெட்' இரண்டு உள்ளன. 'காயின்' மூலம் செயல்படக்கூடிய அந்த டாய்லெட், அடிக்கடி பழுதாகிவிடுகிறது. இதனால் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

சிலர் விமான நிலைய இயக்குனர் அறையில் உள்ள கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். ஆனால் கூட்டம் அதிகமாகும்போது பயணியர் சிரமம் மேலும் அதிகமாகும். அதனால் கூடுதலாக கழிப்பறை வசதி ஏற்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தினர்.

விளையாட்டு போட்டியில்

வெற்றி பெற்றோருக்கு பரிசு

மல்லுாரில் நண்பர் குழு சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டி, கலைநிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடத்தப்பட்டன. தி.மு.க., நகர செயலர் சுரேந்திரன் தலைமை வகித்தார். அதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, தி.மு.க., மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலர் தருண், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரபு ஆகியோர் பரிசு வழங்கினர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடந்தது.

தற்காப்பு கலை பயிற்சிவிழிப்புணர்வு

பொங்கல் பண்டிகையையொட்டி தலைவாசல் அருகே புத்துாரில் தற்காப்பு கலை குறித்த பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவியர், சிலம்பாட்டம், தீப்பந்தம் சுற்றுதல், சுருள்வாள் வீசுதல், கம்பு சுற்றுதல், கம்பம் ஏறுதல் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். இதனால் மாணவர்களுக்கு விழாக்குழு, ஊர் மக்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

எதிரெதிரே பஸ் ஸ்டாப்பால் அவதி

அரியானுாரில் இருந்து ஆட்டையாம்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில், வீரபாண்டி பஸ் ஸ்டாப்பில், சாலை குறுகலாக உள்ளது.

அங்கு சேலத்தில் இருந்து ஆட்டையாம்பட்டி வழியே திருச்செங்கோடு செல்லும் பஸ்கள்; திருச்செங்கோட்டில் இருந்து சேலம் வரும் பஸ்கள் நின்று பயணியரை ஏற்றி இறக்கி செல்கின்றன. இந்த ஸ்டாப்பில் கடைகள் மட்டுமன்றி வீரபாண்டி தபால் அலுவலகமும் உள்ளன.

எதிர் எதிரே உள்ள பஸ் ஸ்டாப்புகளால் பஸ்கள் நிறுத்தப்பட்டால், மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த வழியே தினமும், 50க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி வாகனங்களும் சென்று வருகின்றன.

ஒரே நேரத்தில் இரு பஸ்கள் சாலையை அடைத்தபடி நின்று பயணியரை ஏற்றி இறக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கிறது. மேலும் அந்த வழியே செல்லும் கனரக வாகனங்களை, இருசக்கர வாகன ஓட்டிகள் முந்த முயற்சிக்கும்போது, ஒதுங்க வழியின்றி எதிரே வரும் வாகனம் மீது மோதி விபத்துகளும் நடக்கின்றன. போதிய இடைவெளி விட்டு, பஸ் ஸ்டாப்புகள் ஏற்படுத்த வேண்டும்.

தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்

தி சென்னை சில்க்ஸ் குழுமத்தில் அறிமுகம்

தி சென்னை சில்க்ஸ் குழுமத்தின் புதிய அங்கமாக, நகை துறையில் புது பிராண்டாக, தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட் ைஸ, தி சென்னை சில்க்ஸ் குழும நிர்வாக இயக்குனர் ஆறுமுகம், இணை இயக்குனர்கள் பிரசன்ன அங்குராஜ், கண்ணபிரான் அறிமுகப்படுத்தினர்.

இதுகுறித்து இயக்குனர்கள் கூறியதாவது: சுபிட்ச அடையாளமாக நந்தி உருவ அமைப்பால், தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிராண்டின் முதல் கிளையை, பெரம்பலுாரில் விரைவில் தொடங்க உள்ளோம். தேவராயன் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்-ல் தங்க நகைகள் அனைத்தும், 100 சதவீதம் ஹெச்.யு.ஐ.டி., ஹால்மார்க் தரம், வைர நகைகள் ஐ.ஜி.ஐ., தரச்சான்றிதழுடனும், ஹால்மார்க் தரத்துடன் வெள்ளி பொருட்கள், வெள்ளி ஆபரணங்கள், பரிசு பொருட்கள் உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்

திருவள்ளுவர் தினத்தையொட்டி சேலம் மாநகரில் இறைச்சி, மீன் கடைகள் நேற்று முன்தினம் மூடப்பட்டன. இந்நிலையில் காணும் பொங்கலையொட்டி நேற்று அதிகாலையில் இறைச்சி, மீன் கடைகள் திறக்கப்பட்டன. குறிப்பாக அம்மாபேட்டை, பழைய பஸ் ஸ்டாண்ட், செவ்வாய்ப்பேட்டை, தாதகாப்பட்டி, அன்னதானப்பட்டி, 4 ரோடு, அஸ்தம்பட்டி, அழகாபுரம், சூரமங்கலம் உள்பட மாநகரில் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்து இறைச்சியை வாங்கினர்.

ஆட்டுக்கறி கிலோ, 600 முதல், 800 ரூபாய், கறிக்கோழி, 200, நாட்டுக்கோழி, 550 முதல், 600 ரூபாய்க்கு விற்பனையானது. மீன் கடைகளில்

வஞ்சிரம் கிலோ, 700 முதல் விற்பனையானது.

லோகு, கட்லா - 200, நண்டு - 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடைகளில் வழக்கத்தை விட, இறைச்சி, மீன்கள் விற்பனை நடந்தது.

அதேபோல் மேட்டூர், சின்னபார்க் அருகே சாலையோரம் உள்ள பண்ணை கோழி இறைச்சி கடையில் வாடிக்கையாளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர். அதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆடு, கோழி இறைச்சி கடைகளில் வழக்கத்தை விட வாடிக்கையாளர் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

முன்னோரை வழிபட்ட மக்கள்

தை முதல் நாள் போகி பண்டிகை பெயரில் வீடுகளை சுத்தம் செய்து, காப்பு கட்டி மக்கள் அலங்கரிக்கின்றனர்.

அதேபோல், குடும்ப முன்னோர்களை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிக்கும்படி, போகி பண்டிகை முதல் காணும் பொங்கலான நேற்று வரை, மயானத்தில் உள்ள முன்னோர்களின் சமாதிகளை சுத்தப்படுத்தி, சுண்ணாம்பு அடித்து கலர் பொடிகளை துாவி, மலர்களால் அலங்கரித்து விளக்கு வைத்து வழிபாடு செய்தனர்.

குறிப்பாக வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி, நைனாம்பட்டி, பெத்தாம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில், பலரும் முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us