/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தி.மு.க., இருக்கும் இடத்தில் தவறு நடக்காது'
/
தி.மு.க., இருக்கும் இடத்தில் தவறு நடக்காது'
ADDED : ஜூலை 09, 2025 02:18 AM
சேலம், தி.மு.க., அரசின், 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், சேலம் மத்திய மாவட்டம், கருங்கல்பட்டி பகுதி சார்பில், தாதகாப்பட்டி கேட் பகுதியில் நேற்று நடந்தது.
அதில் எம்.பி., சிவா பேசியதாவது:
எதிர்க்கட்சி தலைவர், இ.பி.எஸ்., 'பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால் என்ன? தி.மு.க., அக்கட்சி
யுடன் கூட்டணி வைக்கவில்லையா? அப்போது இனித்தது. இப்போது எரிகிறது' என, பேசியுள்ளார்.
தி.மு.க., மத்திய அரசில் காங்., - பா.ஜ., என, இரு தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. ஆனால், அதற்கு முன் குறைந்தபட்ச செயல் திட்டம் வகுத்து, மாநில உரிமைகள் பறிபோகாதபடி நிபந்தனைகளை விதித்து கூட்டணி அமைத்தது.
கூட்டணியில் இருந்தபோதும், மாநிலங்களுக்கு ஒரு பிரச்னை எனில் முதல் ஆளாக குரல் கொடுத்து வரும் ஒரே கட்சி, தி.மு.க., தான். தவறு நடக்கும் இடத்தில், தி.மு.க., இருக்காது. தி.மு.க., இருக்கும் இடத்தில் தவறு நடக்காது.
சமீபத்தில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில், திராவிடத்தை அழிக்க வேல் எடுத்து வா முருகா என பேனர்கள் வைத்தும், அண்ணாதுரை, ஈ.வெ.ரா.,வை இழிவுபடுத்தியும் பேசினர்.
கட்சி பெயரில் அண்ணா
துரையை வைத்துள்ள, இ.பி.எஸ்., தலைமையிலான, அ.தி.மு.க., அதை வாய்மூடி கேட்டுக்கொண்டிருந்தது. அதனால், பா.ஜ.,வுடன், தி.மு.க., கூட்டணி வைத்தது பற்றி பேச அவருக்கு உரிமை இல்லை. மத்திய பா.ஜ., அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து
வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.