/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளேடால் கழுத்தை அறுத்து வடமாநிலத்தவர் தற்கொலை
/
பிளேடால் கழுத்தை அறுத்து வடமாநிலத்தவர் தற்கொலை
ADDED : ஆக 22, 2025 01:21 AM
தலைவாசல், ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் புருனியாவை சேர்ந்தவர் திலிப்சிங், 42. இரு வாரங்களுக்கு முன், தமிழகத்துக்கு கூலி வேலைக்கு வந்தார்.
தொடர்ந்து கடந்த, 16ல் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புளியங்குறிச்சியை சேர்ந்த முருகேசன் கிணற்றுக்கு, 'சைடு போர்' போட சென்றார். மதியம், 3:00 மணிக்கு, 'போர்வை' போட்டு துாங்கிக்கொண்டிருந்த அவர், நீண்ட நேரமாக எழவில்லை. சந்தேகத்தில் போர்வையை அகற்றி பார்த்தபோது, கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று, அவர் உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'பணம் இல்லாததோடு, உடல்நிலை சரியின்றி இருந்ததால், பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டது, முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது. தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.