/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாகூர் பொறியியல் கல்லுாரியில் அணுசக்தி தொழில்நுட்ப கண்காட்சி
/
தாகூர் பொறியியல் கல்லுாரியில் அணுசக்தி தொழில்நுட்ப கண்காட்சி
தாகூர் பொறியியல் கல்லுாரியில் அணுசக்தி தொழில்நுட்ப கண்காட்சி
தாகூர் பொறியியல் கல்லுாரியில் அணுசக்தி தொழில்நுட்ப கண்காட்சி
ADDED : அக் 17, 2025 01:43 AM
தலைவாசல், தலைவாசல், தேவியாக்குறிச்சியில் உள்ள தாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இணைந்து, இரு நாட்கள், அணுசக்தி தொடர்பான தொழில்நுட்ப கண்காட்சியை நடத்தின. சேலம் உதவி கலெக்டர் விவேக் யாதவ்(பயிற்சி) தலைமை வகித்தார். தாகூர் கல்வி நிறுவன தலைவர் தங்கவேல், தொடங்கி வைத்தார்.
ஆராய்ச்சி மைய, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பொது விழிப்புணர்வு மற்றும் திட்டமிடல் பிரிவு தலைவர் ஜலஜாமதன்மோகன், அறிவியல் அதிகாரி பார்த்திபன் ஆகியோர், அணுசக்தி துறையின் மூன்று கட்ட அணுசக்தி திட்டம், மருத்துவம், விவசாயம், உணவு, தொழிற்சாலைகளில் சமூக நன்மைகள் குறித்து பேசினர். 25-க்கும் மேற்பட்ட அணு ஆராய்ச்சி மையத்தின், ஆய்வக அளவிலான மாதிரிகள் இடம் பெற்றன. சேலம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டத்தில் இருந்து, பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த, 3,000 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் கட்டுரை, ஓவிய போட்டியில் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை வென்றனர். தாகூர் கல்வி ஆலோசகர் பழனிவேல், செயலர் பரமசிவம், பொருளாளர் காளியண்ணன், துணைத்தலைவர்கள் காளியப்பன், ராஜூ, இணை செயலர்கள் சிலம்பரசன், அருண்குமார், முத்துசாமி, பழனிவேல், ஷபானா உள்பட பலர் பங்கேற்றனர்.