ADDED : ஜூலை 30, 2026 02:05 AM
அ நிறம் | அளவு
சேலம்: ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்யக்கோரி, தமிழ்நாடு செவிலியர் மேம்பாடு சங்கம் சார்பில் சேலம் அரசு மருத்துவ-மனை செவிலியர்கள் நேற்று, 'கருப்பு பேட்ஜ்' அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஆட்குறைப்பு அரசாணையை ரத்து செய்யவும், மருத்துவ பயனாளர்களுக்கு ஏற்ப செவிலியர் பணியிடங்களை உருவாக்குவதோடு, பணி நிரந்-தரப்படுத்தக்கோரி, தமிழகம் முழுதும் கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் பணியில் ஈடுபட்டனர். ஜூலை, 30, 31ல்,(இன்று, நாளை), கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிகின்றனர். இவ்-வாறு அவர்கள் கூறினர்.
