/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபட் மீது புல்லட் மோதி மூதாட்டி பலி
/
மொபட் மீது புல்லட் மோதி மூதாட்டி பலி
ADDED : செப் 19, 2024 07:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி: நங்கவள்ளி அருகே குட்டப்பட்டி ஏர்வாடியை சேர்ந்தவர் ஜெயம்மாள், 78. இவரது உறவினர் அருணாசலம். இவர்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு, டி.வி.எஸ்., மொபட்டில் ஏர்வாடிக்கு புறப்பட்டனர். அருணாசலம் ஓட்டினார். குட்டப்பட்டி மேம்பாலம் அருகே சென்று வலது புறம் திரும்பியபோது வேகமாக வந்த புல்லட், மொபட் மீது மோதியது.
இதில் இருவரும் காயம் அடைந்தனர். அவர்களை மக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவர்கள் பரிசோதனையில் ஜெயம்மாள் இறந்துவிட்டது தெரியவந்தது. ஜெயம்மாள் மகன் பாலன் புகார்படி நங்கவள்ளி போலீசார், புல்லட் ஓட்டியது யார் என விசாரிக்கின்றனர்.

