/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வரி செலுத்தாவிட்டால் குடிநீர் 'கட்' ஓமலுார் டவுன் பஞ்சாயத்து முடிவு
/
வரி செலுத்தாவிட்டால் குடிநீர் 'கட்' ஓமலுார் டவுன் பஞ்சாயத்து முடிவு
வரி செலுத்தாவிட்டால் குடிநீர் 'கட்' ஓமலுார் டவுன் பஞ்சாயத்து முடிவு
வரி செலுத்தாவிட்டால் குடிநீர் 'கட்' ஓமலுார் டவுன் பஞ்சாயத்து முடிவு
ADDED : நவ 28, 2024 06:32 AM
ஓமலுார்: ஓமலுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி செல்வராணி தலைமை வகித்தார். அதில் கவுன்சிலர்கள், 'தொடர் மழையால், 15 வார்டுகளிலும் சாக்-கடை கால்வாயில் அடைப்பு ஏற்படுகிறது. அவற்றை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். கொசு மருத்து தெளிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். அதற்கு, 'உரிய நடவடிக்கை எடுக்-கப்படும்' என, செல்வராணி தெரிவித்தார்.
தொடர்ந்து, '5 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வரியை செலுத்-தாமல் பலர் காலம் தாழ்த்துவதால், டவுன் பஞ்சாயத்து வருவாய் குறைகிறது. பொது நிதியில் திட்டப்பணிகளை மேற்கொள்ள முடி-யவில்லை. 80
லட்சம் ரூபாய் குடிநீர் வரி பாக்கி உள்ளது. அவற்றை வசூலிக்க வேண்டும்' என, கவுன்சிலர்கள் கூறினர்.இதுகுறித்து ஆலோசித்த பின், '10 நாட்களுக்கு குடிநீர் வரி செலுத்த அவகாசம் வழங்கி, அதன் பின் வரி
செலுத்தாதவர்-களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்' என முடிவு செய்யப்-பட்டது. மேலும் சுடுகாட்டில்
உள்ள நினைவு மேடைகளை அகற்றி பூங்கா அமைத்தல் உள்பட, 10 தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன.
செயல் அலுவலர் நளாயினி, துணைத்தலைவி புஷ்பா உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.