/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒப்பந்ததாரரிடம் ரூ.11 லட்சம் நுாதன பறிப்பு போலீசாக நடித்த கும்பலில் ஒருவர் சிக்கினார்
/
ஒப்பந்ததாரரிடம் ரூ.11 லட்சம் நுாதன பறிப்பு போலீசாக நடித்த கும்பலில் ஒருவர் சிக்கினார்
ஒப்பந்ததாரரிடம் ரூ.11 லட்சம் நுாதன பறிப்பு போலீசாக நடித்த கும்பலில் ஒருவர் சிக்கினார்
ஒப்பந்ததாரரிடம் ரூ.11 லட்சம் நுாதன பறிப்பு போலீசாக நடித்த கும்பலில் ஒருவர் சிக்கினார்
ADDED : ஜூலை 06, 2025 01:52 AM
ஓமலுார், கார் வாங்க வந்த கட்டட ஒப்பந்ததாரரிடம், பட்டப்பகலில் போலீஸ் உடையில் வந்த கும்பல், 11 லட்சம் ரூபாயை பறித்துச்சென்றது. கும்பல் தப்ப முயன்றபோது ஒருவர் தடுமாறி விழுந்ததால், அவரை ஒப்பந்ததாரர் பிடித்து, போலீசில்
ஒப்படைத்தார்.நாகப்பட்டினம், வஞ்சூரை சேர்ந்தவர் ராபி சாகிப், 51. கட்டட ஒப்பந்ததாரரான இவர், கார் வாங்க வேண்டி, ஆன்லைன் விளம்பரம் மூலம், ஆம்பூரை சேர்ந்த அலி என்பவரை தொடர்பு கொண்டார். அப்போது, 'கிருஷ்ணகிரியில் கார் உள்ளது. 11 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு அங்கு வர வேண்டும்' என்றார். அதன்படி ராபிசாகிப், அவரது நண்பர்கள் ரத்தினவேல், பைசலுடன், 'ஸ்விப்ட்' காரில் கிருஷ்ணகிரி சென்றார்.
அங்கு கார் இல்லாததால், தர்மபுரியில் இருக்கும் என கூறிய அலி, அவரது காரில் ராபிசாகிப்பை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். அங்கும் இல்லாததால், சேலத்தில் கண்டிப்பாக கிடைக்கும் என, அலி கூறி புறப்பட்டார்.
மதியம், 3:00 மணிக்கு, தீவட்டிப்பட்டி, ஜோடுகுழி அருகே வந்தபோது, போலீஸ் உடையில் இருந்த, 4 பேர், காரை நிறுத்தினர். ராபிசாகிப், பணத்தை காரில் வைத்துவிட்டு இறங்கினார். அந்த நேரம், பணத்துடன் அலியும், டிரைவரும் காரில் சென்றுவிட்டனர்.
தொடர்ந்து, போலீஸ் உடையில் இருந்த, 4 பேரும், அவர்கள் வந்த காரில் தப்ப முயன்றனர். அப்போது ஒருவர், தடுமாறி விழுந்ததால், அவரை ராபிசாகிப் பிடித்துக்கொண்டார். மற்றவர்கள் தப்பிவிட்டனர். பிடிபட்டவரை, மக்கள் உதவியுடன் கட்டிப்போட்டு, தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்து போலீசார் விசாரித்ததில், வேலுாரை சேர்ந்த பவன்குமார், 24, என தெரிந்தது. அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து
விட்டு, போலீசார் தொடர்ந்து
விசாரிக்கின்றனர்.