/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொடிக்கம்பம் அமைக்க அ.தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு; தி.மு.க.,வினர் திரண்டதால் பரபரப்பு

ADDED : ஜன 20, 2025 07:16 AM
இளம்பிள்ளை: சேலம் அருகே அ.தி.மு.க., கொடிக்கம்பம் அமைக்க, தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் முன்பிருந்த, அரசியல் கட்சி கொடி கம்பங்கள், ஐந்து ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டன. சில மாதங்களுக்கு முன், தி.மு.க.,வினர் கொடிக்கம்பம் அமைத்தனர். இந்நிலையில் இளம்பிள்ளை அ.தி.மு.க., நகர செயலர் சிவலிங்கம் தலைமையிலான கட்சியினர், கொடிக்கம்பம் அமைக்கும் முயற்சியில் நேற்று காலை, 10:00 மணியளவில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இடங்கணசாலை நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் தி.மு.க.,வினர் திரண்டனர்.
இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக ஏற்படும் நிலை உருவானது. இதையறிந்து ஊரக டி.எஸ்.பி., தேன்மொழிவேல் தலைமையிலான மகுடஞ்சாவடி போலீசார் விரைந்தனர். இருதரப்பினரிடமும் தனித்தனியே பேசினர். இதில் இருதரப்பினரும் சமாதானமாகி கலைந்து சென்றனர். ஆனாலும் அ.தி.மு.க.,வினர் கொடிக்கம்பம் நடவில்லை. இச்சம்பவங்களால் இளம்பிள்ளையில் மதியம் வரை பதற்றம் நிலவியது.