/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'நம்ம ஊரு திருவிழா' ; நாட்டுப்புற குழுவினர் ஆர்வம்
/
'நம்ம ஊரு திருவிழா' ; நாட்டுப்புற குழுவினர் ஆர்வம்
'நம்ம ஊரு திருவிழா' ; நாட்டுப்புற குழுவினர் ஆர்வம்
'நம்ம ஊரு திருவிழா' ; நாட்டுப்புற குழுவினர் ஆர்வம்
ADDED : மார் 24, 2025 06:59 AM
சேலம்: தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவையொட்டி, சென்னையில் நாட்டுப்புற கலைகள் திருவிழா நடக்கிறது. அதேபோல் சேலம் உள்பட, 8 மண்டலங்களில், 'நம்ம ஊரு கலைத்திருவிழா' கடந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. சேலம் மண்டலத்தில் நடப்பாண்டுக்கு, நாட்டுப்புற கலைக்குழுக்கள் தேர்வுக்கு வீடியோ பதிவு, சேலம் அரசு இசைப்பள்ளியில் நடந்தது. நேற்று முன்தினம் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்பை இசை, கை சிலம்பாட்டம், இறை நடனம் என, 15 நாட்டுப்புற கலைக்குழுக்களின் ஆட்டங்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டது. நேற்று தெருக்கூத்து, நாடகம், பொம்மலாட்டம் உள்பட, 16 நாட்டுப்புற கலைக்குழுக்களின் நடனங்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இதில், 9 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, மண்டல திருவிழாவில் இடம் பெற செய்வதோடு, அவற்றில் இருந்து தேர்வு செய்யப்படும் சிறந்த குழு, மாநில அளவில் சென்னையில் நடக்கும் திருவிழாவில் பங்கேற்கும் என, கலை பண்பாட்டுத்துறையினர் தெரிவித்தனர்.