ADDED : மே 07, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்:
தாரமங்கலம், கே.ஆர்.தோப்பூர், காந்தி நகரை சேர்ந்தவர் அருள், 42. பெயின்ட் அடிக்கும் தொழிலாளி. இவரது மனைவி சந்தியா. இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால், 10 ஆண்டுக்கு முன் சந்தியா கோபித்துக்கொண்டு,
இரு மகன்களுடன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.அருள், அவரது தந்தையுடன் வசித்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு டீ குடிக்க, கே.ஆர்.தோப்பூர் சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை 7:00 மணிக்கு, அந்த பகுதியில் உள்ள ஒடச்சக்கரை ஏரியில் அருள் இறந்து கிடந்தார்.ஆனால் அருள் தந்தை அம்மாசி, 'நீச்சல் தெரியாத அவர், இயற்கை உபாதைக்கு சென்று ஏரியில் இறங்கியபோது தவறி விழுந்து இறந்துவிட்டார்' என தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இருப்பினும் போலீசார் விசாரிக்கின்றனர்.