/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொடி கம்பங்களை தாமதமின்றிஅகற்ற கட்சியினருக்கு உத்தரவு
/
கொடி கம்பங்களை தாமதமின்றிஅகற்ற கட்சியினருக்கு உத்தரவு
கொடி கம்பங்களை தாமதமின்றிஅகற்ற கட்சியினருக்கு உத்தரவு
கொடி கம்பங்களை தாமதமின்றிஅகற்ற கட்சியினருக்கு உத்தரவு
ADDED : ஏப் 23, 2025 01:13 AM
ஆத்துார்:ஆத்துார் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சியினருடன் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து, நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபா கமால் பேசியதாவது:
நீதிமன்ற உத்தரவுபடி சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி, ஜாதி, மதம் சார்ந்த கொடிக்கம்பங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஏற்கனவே நடந்த கூட்டத்தில் கொடிக்கம்பங்களை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏப்., 21 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இனி அந்தந்த அரசு துறை அதிகாரிகள் களமிறங்கி, கொடிக்கம்பங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும். அதற்கான செலவினங்களை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் அல்லது அமைப்பினரிடமிருந்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.மா.கம்யூ., தாலுகா செயலர் முருகேசன், 'இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால் கால அவகாசம் வழங்க வேண்டும்' என்றார். அதற்கு கமிஷனர், 'நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பதால், கொடி கம்பங்களை தாமதமின்றி அகற்றிக்கொள்ள வேண்டும்'
என்றார்.

