/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அதிவேக வாகனங்களால் பாதிக்கப்படும் மக்கள்
/
அதிவேக வாகனங்களால் பாதிக்கப்படும் மக்கள்
ADDED : நவ 17, 2025 04:43 AM
பனமரத்துப்பட்டி: சேலம் - பனமரத்துப்பட்டி பிரதான சாலையில், காந்தி நகரில் டாஸ்மாக் கடை மற்றும் அரசு வங்கி செயல்படுகிறது. அங்கு மது வாங்க வரும், 'குடி'மகன்கள், அஜாக்கிரதையாக சாலை குறுக்கே கடப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதுகுறித்து, பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து காந்தி நகர் மக்கள் கூறியதாவது:காந்தி நகரில் வங்கி, டாஸ்மாக் கடை, ஓட்டல், காபி பார், மளிகை கடை உள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அரளி பூ ஏற்றி செல்லும் வாகனங்கள், எம்.சாண்ட் ஏற்றி செல்லும் கனரக லாரிகள், அதிவேகமாக செல்கின்றன. பள்ளி குழந்தைகள், முதியோர், வாகனங்களில் சிக்கி காயமடைகின்-றனர். பள்ளி, கல்லுாரி வாகனங்கள், பயணியர் பஸ்கள் நின்று செல்வதற்கு இடையூறாக உள்ளது.
டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள், அதிவேகமாக, தாறு-மாறாக வாகனங்களை ஓட்டி வருவதால் விபத்து ஏற்படுகிறது. மாலை நேரத்தில் சாலையை கடக்க முடியவில்லை.
இறைச்சி கடைகளை சுற்றி வரும் தெரு நாய்கள் சாலையில் ஓடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
காந்தி நகரில் இரு இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

