/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மக்கள் வெள்ளத்தில் களைகட்டிய வண்டி வேடிக்கை
/
மக்கள் வெள்ளத்தில் களைகட்டிய வண்டி வேடிக்கை
ADDED : ஆக 08, 2025 01:46 AM
சேலம், சேலம், குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் ஆடி திருவிழாவையொட்டி, வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் பல்வேறு குழுவினர் சார்பில், சமயபுரம் மாரியம்மன், சூடிகொடுத்த சுடர்கொடி ஆண்டாள் நாச்சியார், சரஸ்வதி சபதம், அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், பெரியநாயகி அம்மன் சமேத தோணியப்பருடன் நாரதர், சிவன் பார்வதி, பாரத மாதாவுடன் கொடி காத்த குமரன், கண்ணகி நாடக காட்சி, அறுபடை வீடு முருகன்களின் திருக்கோலம் என, 20க்கும் மேற்பட்ட வண்டிகளில், கடவுள் வேடமணிந்து வந்தனர். இந்த வண்டிகள், மக்கள் வெள்ளத்தின் நடுவே வந்தன.
இதை ஒட்டி, குகை திருச்சி பிரதான சாலை இருபுறமும், 500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்ததால், விற்பனை களை கட்டியது. பாதுகாப்பு பணியில், 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.