/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துார்வாரப்படாத சாக்கடை மக்கள் கடும் அவதி
/
துார்வாரப்படாத சாக்கடை மக்கள் கடும் அவதி
ADDED : டிச 10, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துார்வாரப்படாத சாக்கடை
மக்கள் கடும் அவதி
மகுடஞ்சாவடி, டிச. 10- -
சித்தர்கோயில் அருகே, சத்யா நகர் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக சாக்கடையை துார்வாரவில்லை. இதனால் கழிவு நீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், விஷ ஜந்துக்கள் குடியிருப்புகளுக்கு படையெடுக்கின்றன. இதனால் மக்கள் பீதி அடைகின்றனர். எனவே, சாக்கடையை துார்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.